முகப்பு /செய்தி /இந்தியா / பறிபோகும் ஜார்கண்ட் முதல்வர் பதவி.. ஹேமந்த் சோரேனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

பறிபோகும் ஜார்கண்ட் முதல்வர் பதவி.. ஹேமந்த் சோரேனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஹேமந்த் சோரேன் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஹேமந்த் சோரேன் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

தனது பெயரில் சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு முதல் இவர் முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இவரின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை அம்மாநிலத்தின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்து எதிர்கொண்டது. தேர்தல் முடிவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் வென்று 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் கூட்டணி ஆட்சி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சரானார். எதிர்க்கட்சியான பாஜகவிடம் 25 இடங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்தாண்டு அங்கு நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பெயரில் சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது எனக் கண்டறிந்து இது தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் டெலிட் ஆனது

இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. இதையடுத்து ஹேமந்த் சோரனின் முதலமைச்சர் பதவி தற்போது பறிபோகவுள்ளது. இந்த விவகாரம் ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கை பாஜக தயார் செய்தது போலவே உள்ளது, அமைப்புகளை தங்கள் தேவைக்கேற்ப வளைத்துக் கொள்வது எவ்வாறு ஜனநாயகத்தில் ஏற்புடையது. பாஜக அனைத்து அமைப்புகளையும் துஷ்பிரயோகம் செய்கிறது என ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். இதை எதிர்கொள்ள ஜார்கண்ட் மக்கள் தயாராக உள்ளனர் என்றார். அதேவேளை, மாநில பாஜகவோ இது குறித்து கூறுகையில் " மக்கள் நம்பிக்கையை ஹேமந்த் சோரன் இழந்து விட்டார். அவர் தனது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்" என்றுள்ளது.

First published:

Tags: Election Commission, Hemant Soren, Jharkhand