யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-ம் மாயாவதியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளன.

யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
யோகி ஆதித்யநாத், மாயாவதி
  • News18
  • Last Updated: April 12, 2019, 12:22 PM IST
  • Share this:
தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பான புகாரில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீரட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உறுதி செய்யபட்டதால், அவர் விளக்கம் அளிக்குமாறு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


அதேபோல், கடந்த 7-ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மாயாவதி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது போல சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான புகாரில் மாயாவதியும் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Also see... Lok Sabha Election 2019: தலைவர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை- என்ன பேசினார்கள்?

Also see... அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ரூ 2.10 கோடி பறிமுதல்... 


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading