டிக்கெட்டில் மோடி புகைப்படம்! ரயில்வேக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம்

சில மாநிலங்களில் வழங்கப்பட்ட ரயில்வே டிக்கெட்டுகளில் மோடியின் உருவப் படம் பொறிக்கப்பட்டிருந்தது.

டிக்கெட்டில் மோடி புகைப்படம்! ரயில்வேக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம்
டீ கப்
  • News18
  • Last Updated: April 2, 2019, 8:23 PM IST
  • Share this:
ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ கப்புகளில் பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார வாசகங்கள் இருப்பது மற்றும் டிக்கெட்டுகளில் மோடியின் புகைப்படம் ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தைவிதிகளை தீவிரமாகப் பின்பற்றிவருகிறது.

இந்தநிலையில், விமான போர்டிங் பாஸ்களில் மோடியின் புகைப்படம் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ரயில் டிக்கெட்டுகளிலும் மோடியின் புகைப்படம் இருந்தது.


அதேபோல, ரயில்வே நிலையங்களில் வாங்கப்படும் டீ கப்புகளில் (Main Bhi Chowkidar) என்ற பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த டீ கப்பை ரயில்வே பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அது இணையத்தில் வைரலானது. இந்தநிலையில், இந்த விவகாரங்கள் குறித்து ரயில்வே துறையிடம் இன்று தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.



இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ரயில்வே துறைக்கு அளித்துள்ள நோட்டீஸில், ‘ரயில்வே நிலையங்களில் வழங்கப்பட்ட டீ கப்புகளில் பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார வாசங்கள் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கவேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் அதிருத்தியையும் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக, ரயில்வே பொறுப்பு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:



ஐ.பி.எல் தகவல்கள்









First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading