மோடிக்காக ’டீ கப்’ பிரசாரமா? - ரயில்வேக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

’தேர்தல் நேர நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் செயல்பாடுகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது'.

மோடிக்காக ’டீ கப்’ பிரசாரமா? - ரயில்வேக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
பிரசார டீ கப்
  • News18
  • Last Updated: April 3, 2019, 1:37 PM IST
  • Share this:
ரயில்களில் டீ வழங்கப்படும் பேப்பர் கப்-களில் பிரதமர் மோடியின் படம் மற்றும் கொள்கை முழக்கம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்ததற்காக இந்திய ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் நேர நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் செயல்பாடுகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது கொள்கைகளை விளக்கும் வகையிலான பேப்பர் கப் மூலம் டீ விநியோகம் நடப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்தே தேர்தல் ஆணையம் இந்திய ரயில்வேத் துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்திய ரயில்வே நிர்வாகம் அதுபோன்ற பேப்பர் கப்-கள் அனைத்தையும் நீக்கிவிட்டதாகவும், ஒப்பந்ததாரரை தண்டித்துவிட்டதாகவும் பதில் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

மேலும் பார்க்க: நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன?
First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading