• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஸ்மிர்தி இரானி அளித்த புகாரில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

ஸ்மிர்தி இரானி அளித்த புகாரில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

ஸ்மிர்தி இரானி

ஸ்மிர்தி இரானி

அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியைக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றியதாக ஸ்மிர்தி இரானி டிவிட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக பாஜகவின் அமேதி தொகுதி வேட்பாளர் ஸ்மிர்தி இரானி கூறியதில் உண்மையில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றியதாக ஸ்மிர்தி இரானி ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

அதில் அதிக வயதான பாட்டி ஒருவர் தன்னை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றவர்கள், தான் பொத்தானை அழுத்துவதற்கு முன்பு அவர்களே அழுத்திவிட்டனர் என்று கூறுகிறார்.



இதை வைத்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அமேதி தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகப் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த வீடியோ குறித்து விசாரணை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “ஸ்மிர்தி இரானியின் புகார் குறித்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த வயதான பாட்டி பேசுவது சோடிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: