ஹோம் /நியூஸ் /இந்தியா /

உச்சக்கட்ட குழப்பத்தில் சிவசேனா கட்சி! சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்!

உச்சக்கட்ட குழப்பத்தில் சிவசேனா கட்சி! சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்!

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்

சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்ரே என இரு பிரிவுகளாக பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சிவசேனா கட்சி தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே என இரு பிரிவுகளாக உள்ள நிலையில் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தலில் இரு பிரிவுகளுக்கு அக்கட்சியின் சின்னமான 'வில் அம்பு' சின்னத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இரு தரப்புக்கும் வேறு தனிச் சின்னங்கள் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் எனவும், இரு தரப்பிக்கு இடையே கட்சியின் உரிமை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கானும் இதே நிலை தொடரும் என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

  கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமான பெயர் மற்றும் சின்னத்திற்கான விருப்பங்களை நாளைக்குள் (அக்.10) கூற இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அநீதியானது என உத்தவ் தாக்ரே தரப்பு ஆதரவாளரும், மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான அம்பாதாஸ் தவே கருத்து தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: தினம் தினம் பிரச்னை! நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! அவதிக்குள்ளான பயணிகள்!

  வரும் நவம்பர் 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தவ் தாக்ரே தரப்பு தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த ரமே,் லத்கேவின் மனைவி ருதுஜா லத்கேவை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இவருக்கு மகாவிகாஸ் ஆகாதி கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தருகின்றன. ஆளும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூட்டணி சார்பில் பாஜக தேர்தலில் களம் காண்கிறது. பாஜக வேட்பாளராக முர்ஜி பாடேல் என்பவர் களமிறங்குகிறார்.

  மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், இந்த கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சியின் முன்னணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி ஆட்சியை கவிழ்த்தனர். கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு கொண்ட ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். தற்போது கட்சியும் சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற சட்ட போராட்டம் உத்தவ் தாக்ரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்புக்கும் நடைபெற்று வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Maharashtra, Shiv Sena, Uddhav Thackeray