யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

மத மற்றும் சாதி ரீதியாக அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
யோகி ஆதித்யநாத், மாயாவதி
  • News18
  • Last Updated: April 15, 2019, 3:19 PM IST
  • Share this:
தேர்தல் விதிமுறைகளை மீறியதால் யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீரட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


அதேபோல், கடந்த 7-ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மாயாவதி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்னர், இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்தது.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடையும், மாயாவதி 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத மற்றும் சாதி ரீதியாக அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்