மேற்கு வங்க வன்முறை எதிரொலி! கடைசி நாள் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்

கொல்கத்தாவின் முக்கியமான ஆளுமையாக திகழந்த இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்க வன்முறை எதிரொலி! கடைசி நாள் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: May 15, 2019, 11:21 PM IST
  • Share this:
மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து கடைசி கட்ட வாக்குப் பதிவுக்கான கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. நடைபெற்ற முடிந்து ஆறு கட்ட வாக்குப் பதிவின்போதும் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. ஏழாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நேற்று, தேர்தல் பிரச்சாரத்துக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கொல்கத்தாவுக்குச் சென்றார். அப்போது அமித்ஷாவின் வாகனத்தில் கற்கள் வீசப்பட்டது. அவருடைய வருகைக்கு, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்டனர். அதனையடுத்து, பா.ஜ.க மாணவர் அமைப்பினுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.


கொல்கத்தாவின் முக்கியமான ஆளுமையாக திகழந்த இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர். பா.ஜ.க மாணவர் அமைப்பினர், வித்யாசாகரின் சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதுவரையில், இல்லாதவகையில் சட்டப்பிரிவு 324யை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மேற்குவங்கத்தின் டும்டும், பாராசட், பாசிர்ஹட், ஜெய்நகர், மதுரபுர், ஜாதவ்புர், டைமண்ட் ஹர்பவுர், தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப் பதிவு மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமான நடைமுறையின் படி, மே 17-ம் தேதி மாலை வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். வன்முறையின் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தை மே 16-ம் தேதி 10 மணியுடன் முடித்துக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்குவங்கத்தின் உள்துறை செயலாளர் அட்ரி பட்டாச்சார்யா, கூடுதல் காவல்துறைத் தலைவர் ராஜீவ் குமார் இருவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.Also see:
First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading