ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

 3 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

3 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் பா.ஜனதா-நாகா மக்கள் முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த நெப்பியூ ரியோ முதல்வராக உள்ளார். மேகாலயாவில் பாரதிய ஜனதா-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வராக தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட்  சங்மா உள்ளார். திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மாணிக் சாகா முதலமைச்சராக உள்ளார்.

இந்த 3 மாநிலங்களிலும் விரைவில் சட்டசபையில் பதவி கால முடிவடைய உள்ளது. நாகலாந்து மாநிலத்தில் மார்ச் 12, மேகாலாயா மாநிலத்தில் மார்ச் 15 மற்றும் திரிபுரா மாநிலத்தில் மார்ச் 22 ஆகிய தேதிகளில் சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது.  இதனால் இந்த மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.

அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் தேர்தல் நடைபெ உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி 3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறை உடனடியாக அமல்படுத்தப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டது.

குஜராத், இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

First published: