Home /News /national /

பரோட்டா சாப்பிடுகிறேன்... நேர்மையான பதிலால் பலரின் உள்ளம் கவர்ந்த UBER ஓட்டுனர்..

பரோட்டா சாப்பிடுகிறேன்... நேர்மையான பதிலால் பலரின் உள்ளம் கவர்ந்த UBER ஓட்டுனர்..

நேர்மையால் பாராட்டுகளை குவித்த யூபர் ட்ரைவர்

நேர்மையால் பாராட்டுகளை குவித்த யூபர் ட்ரைவர்

Twitter Trending: கரிஷ்மா மேஹ்ரோத்ரா என்ற வாடிக்கையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அனுபவம் இணையத்தில் பாராட்டுகளை குவித்துவருகிறது.

    பயணத்திற்காக UBER,  OLA போன்ற சேவைகளை நாம் புக் செய்யும் போது, பலமுறை ட்ரைவர்கள் செல்லும் இடம் மற்றும் கட்டணத்தை காரணம் காட்டி புக்கிங்கை கேன்சல் செய்வதை நாம் பலரும் எதிர்கொண்டிருப்போம். ஆனால், ஒரு யூபர் ட்ரைவர் தனது வாடிக்கையளார்களிடம் நான் பரோட்டா சாப்பிடுகிறேன் என நேர்மையை வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரிஷ்மா மேஹ்ரோத்ரா என்ற அந்த வாடிக்கையாளர் ட்விட்டரில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த வாடிக்கையாளர் மே 15ஆம் தேதி அன்று யூபர் மூலம் ரைடு புக் செய்துள்ளார். புக் செய்த உடன் அந்த ட்ரைவருக்கு மேசேஜ் செய்த அந்த பெண், நீங்கள் நிச்சயம் வந்து பிக் அப் செய்து கொள்வீர்கள் அல்லவா என கேட்டுள்ளார். அதற்கு அந்த ட்ரைவர், நிச்சயம் நான் வருவேன். நான் பரோட்டா சாப்பிடுகிறேன். பாதி மிச்சம் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டு நிச்சயம் வந்து பிக் செய்கிறேன் என பதில் அளித்துள்ளார். இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை அந்த பெண் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    ஓட்டுநரின் இந்த நேர்மையை பலரும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். அந்த ட்ரைவரின் நேர்மைக்காகவே கூடுதலாக டிப்ஸ் தாருங்கள் என அந்த பெண்ணுக்கு பதில் அளித்துள்ளனர்.

    ஓலா மற்றும் யூபர் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அன்மை காலத்தில் அதிக புகார் அளித்ததாக இரு நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் கேன்சலேஷன் கொள்கை வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லா பெனால்டி தொகை கட்டும் சூழலை உருவாக்குவதாக வாடிக்கையாளர்கள் தொடர் புகார் அளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் - யார் இவர்?

    இதை இரு நிறுவனங்களும் சீரமைத்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் நுகர்வோர் விவகாரங்கள் செயலாளர் ரோஹித் குமார் சிங் அறிவுறுத்தினார். இந்த சூழலில் ஒரு யூபர் ட்ரைவரின் நேர்மையான பதில் இணையத்தில் வைரலாகிவருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Trending, Twitter, Uber

    அடுத்த செய்தி