ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் வீட்டு உணவுக்கு அனுமதி கோரிய நிலையில் அவரை ஜெயில் சாப்பாட்ட முதலில் சாப்பிடுங்கள் என நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மும்பை நகர காவல் ஆணையராக இருந்த பரம் பீர் சிங், அனில் தேஷ்முக் மும்பை மதுபானக்கூடங்கள், ரெஸ்டாரண்ட்களை மிரட்டி அவர்களிடம் இருந்து மாதம் 100 கோடி ரூபாய் பணம் வசூல் செய்து தர வேண்டும் என தன்னை நிர்பந்திப்பதாக அவர் மீது பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அனில்தேஷ்முக் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர், கடந்த நவம்பர் 1ம் தேதி அனில் தேஷ்முக்கிடம் 12 மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ அமைப்பும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
Also read:
திருடனுடன் மல்லுக்கட்டு.. நடிகை மீது சரமாரி தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி..
இதனிடையே முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் என அனில் தேஷ்முக் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, முதலில் சிறை உணவை சாப்பிடுங்கள், பிறகு சரியில்லை என்றால் வீட்டு உணவுக்கு அனுமதி வழங்குகிறேன் என அறிவுறுத்தினார். அதே நேரத்தில் அவரின் மருந்துகளுக்கு அனுமதி வழங்கியதுடன், 71 வயதாவதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு படுக்கை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.