கேரள மக்கள் மும்பையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிப்பதில் அதீத ஆர்வம் காட்டிய, 1991ம் ஆண்டு கேரளாவில், சிறிதாக உருவானது ஈஸ்ட் வெஸ்ட் டிராவல்ஸ். இதனை தக்கியுதீன், ஷஹாபுதின், நாசர் என்ற 3 சகோதரர்கள் தொடங்கினர். மும்பையில் இருந்து கேரளாவுக்கு நேரடி விமான சேவைகள் அதிகம் இல்லாத காலமது. வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரையும், வளைகுடா நாடுகளுக்கு பறப்போருக்கும் இந்த நிறுவனம் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை செய்து வந்தது.
அந்த கால கட்டத்தில் ஏர் இந்தியா விமானம் மட்டுமே வெளிநாட்டு சேவையையும், உள்நாட்டு விமான சேவையில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே இருந்தன. ஏன் தனியார் விமானத்தை இயக்கக்கூடாது என்ற தக்கியுதீனின் வியாபார சிந்தனை அவரின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
1991ம் ஆண்டே தனியார் விமானங்களுக்கும் அரசு அனுமதி அளித்ததை அடுத்து, இந்தியன் ஏர்லைன்சுக்கு போட்டியாக போயிங் 737 ஏர்லைனர் விமானத்தை வாடகைக்கு எடுத்து களமிறக்கி அதற்கு ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என பெயரிட்டார் தக்கியுதீன். அந்த காலகட்டத்தில் தனியார் விமானத்தை இயக்க சான்று பெற்ற முதல் நிறுவனமே ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தான்.
மேலும் படிக்க...தோண்டத்தோண்ட படிக்கும், பணிபுரியும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள்.. ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் பட்டதாரி கைது..
8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தக்கியுதீனின் யோசனையான மும்பையில் இருந்து கேரளாவுக்கு விமானம் இயக்கப்பட்டதுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைத்துறையினர், அரசியல்வாதிகள், அன்னை தெரசா என இந்த விமானத்தில் பறக்காத பிரபலங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் அந்நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியது. தக்கியுதீனுக்கு பல தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறினார் தக்கியுதீன்.
ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்சில் அழகான பணிப்பெண்கள் ஏர் ஹோஸ்ட்சாக பணியமர்த்தப்படவில்லை. மாறாக துடிப்பு மிக்க இளைஞர்கள் பணியில் இருந்தனர். குறுகிய காலத்தில் 4500 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றினர்.
நிறுவனம் மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த தருணத்தில் தான்.1995 நவம்பர் 13ம் தேதி குண்டுதுளைக்காத மெர்சிடீஸ் காரில் தக்கியுதீன் தனது அலுவலகத்துக்கு செல்லும்போது, காரை வழிமறித்த ஒரு கும்பல் கார் கண்ணாடியை சம்பட்டிகளால் அடித்து உடைத்து துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவீழ்த்தி கொன்றது.
நாளடைவில் ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு தகுந்த தலைவர் இல்லாததால், இருந்த சுவடே தெரியாமல் அந்நிறுவனம் தோன்றிய வேகத்தில் மறைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Air force, Kerala, Soorarai Pottru