இந்துகுஷ் மலைப்பகுதியில் கடும் நில நடுக்கம்...! டெல்லியிலும் உணரப்பட்டதால் பரபரப்பு

Delhi Earthquake | டெல்லியில் மட்டுமல்லாது சண்டிகர், மதுரா ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்துகுஷ் மலைப்பகுதியில் கடும் நில நடுக்கம்...! டெல்லியிலும் உணரப்பட்டதால் பரபரப்பு
நிலநடுக்கம்
  • News18
  • Last Updated: December 20, 2019, 5:34 PM IST
  • Share this:
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் இன்று மாலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சில இடங்களில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் மட்டுமல்லாது சண்டிகர், மதுரா ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர், ஹிந்துகுஷ் பகுதியில் மட்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது.


நில அதிர்வு குறித்த செய்தியால் வட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ‘அலர்ட் மெசேஞ்கள்’ பரவி வருகின்றன.

வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே, டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக புவியியல் அதிகாரிகள் கூறுகின்றனர்.மேலும் பார்க்க: ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீயால் எமர்ஜென்ஸி அறிவிப்பு... சர்ச்சையில் சிக்கிய பிரதமர்...!
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading