ஹோம் /நியூஸ் /இந்தியா /

அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

அதிகாலை 2.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andaman & Nicobar Islands, India

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரில் வியாழக்கிழமையன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆகும்.

    நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, நேற்று நேபாளத்தில் 6.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 6.6, 6.27 என்ற அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

    இந்திய தலைநகர் டெல்லியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Andaman And Nicobar Islands S33p01, Earthquake