முகப்பு /செய்தி /இந்தியா / Earthquake : பெங்களூருவில் இன்று காலை நில அதிர்வு

Earthquake : பெங்களூருவில் இன்று காலை நில அதிர்வு

Earth Quake

Earth Quake

பெங்களூருவில், இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவாகியிருக்கும் இந்த நில அதிர்வு இன்று காலை 7.14 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு நகரின் வடக்கு - வடகிழக்கு திசையில் 66 கிமீ தொலைவியிலும், 23 கிமீ ஆழத்திலும் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அம்மையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கி ஆட்டம் கண்டுள்ளன. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் தாக்கம் பெங்களூருவில் எதிரொலித்ததா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து ட்விட்டரில் இது குறித்த வீடியோக்களும், தகவல்களும் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Bengaluru, Earthquake