ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஐரோப்பிய நாடுகளின் பிரச்னை உலகின் பிரச்னை இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

ஐரோப்பிய நாடுகளின் பிரச்னை உலகின் பிரச்னை இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தற்போது கூட ஐரோப்பிய நாடுகள் எரிசக்திக்கு ரஷ்யாவை சார்ந்த உள்ளன என அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் GlobSec 2022 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்து பேசியுள்ளார். ஐரோப்பாவின் செக்சியா மற்றும் ஸ்லோவிக்கிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

கருத்தரங்கின் போது நெறியாளர் ரஷ்யா - உக்ரைன் போர், அதில் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து விமர்சிக்கும் விதமாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து கேள்வி எழுப்பினார். நெறியாளருக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "இதில் ஐரோப்பிய நாடுகள் நியாத்துடன் பேச வேண்டும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் அந்நாடு போரில் செலவு செய்ய உதவும் என்கிறீர்கள். இந்தியா மட்டுமா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கூட ஐரோப்பிய நாடுகள் எரிசக்திக்கு ரஷ்யாவை சார்ந்தே உள்ளன.

எனவே நீங்கள் பிறருக்கு வைக்கும் அளவுகோலை முதலில் உங்களுக்கு வைத்து பாருங்கள். உக்ரைன் மீது இந்தியா கவலைப்படாமல் ஒன்றும் இல்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் தொலைப்பேசி மூலம் பேசி, இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்

தொடர்ந்து அவர், 'ஐரோப்பாவுக்கு அந்த அளவுக்கு அக்கறை இருந்தால் ஏன் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் எண்ணெய்களை சந்தையில் அனுமதிப்பதில்லை. இந்தியா உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடு. உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்று. எனவே, எங்களின் தேவையானது தனித்துவமானது. எனவே, ஐரோப்பிய நாடுகளில் தங்கள் பிரச்னையை உலகின் பிரச்னையாக பார்க்கும் மனோபாவத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என காட்டமாக விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Crude oil, External Minister jaishankar