முகப்பு /செய்தி /இந்தியா / உக்ரைன் விவகாரத்தில் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திர முடிவு எடுத்தோம்- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் விவகாரத்தில் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திர முடிவு எடுத்தோம்- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் சுதந்திர நிலைப்பாட்டை உலக நாடுகள் கூர்ந்து கவனித்துள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-இல் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்புரை ஆற்றினார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய இரு நாடுகளும் ஆதரவாகவோ, எதிராகவோ சார்பு நிலையை எடுக்கவில்லை. பெரும்பாலான மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாக கண்டித்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தன.ஆனால், இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

மேலும், உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் உலக நாடுகள் எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி அழுத்தம் தந்து வருகிறது. ஆனால், பிற நாடுகளின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் இந்தியா தனது நலனுக்கு ஏற்ப தான் செயல்படும் என இந்திய அரசு முடிவெடுத்து எண்ணெய் வாங்கியது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூட தொடர்ந்து பாராட்டி வருகிறார். இந்நிலையில், அகமதாபாத் கருத்தரங்கில் இந்தியா வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "உக்ரைன் போரில் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுத்த இந்தியா பல்வேறு நாடுகளின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு பக்கம் சார்பு எடுக்க வேண்டும் என உலக நாடுகளிடம் அழுத்தம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு திரும்பி போங்கள், ஐரோப்பாவுக்கு நீங்கள் தேவையில்லை.. இந்தியர் மீது மீண்டும் இனவெறி தாக்குதல்

ஆனால், அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இந்திய மக்களுக்கு தேவையான விதத்தில் சுதந்திரமான முடிவு எடுத்தது சரியென நாங்கள் நம்புகிறோம். இதை உலகம் கவனித்துள்ளது. உலகம் இந்தியாவை முறையாக உணர வேண்டியது அவசியம். இந்தியா 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 10ஆவது பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது, ஆனால் தற்போது 5ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் துறையில் வளர்ச்சி கண்ட இந்தியா தற்போது உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாம் உருவாக்கி வைத்த பிராண்ட் இமேஜ் இந்தியா வெளியுறவுக் கொள்கையின் தோற்றத்தையே மாற்றியுள்ளது" என்றார்.

First published:

Tags: External Minister jaishankar, Russia - Ukraine