ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் - கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

pregnant lady

சிகிச்சையின் போது கிட்டத்தட்ட 1500 ஸ்டீராய்ட் மற்றும் ஹார்மோன் ஊசிகள் அப்பெண்ணுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

  • Share this:
தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 8 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக வழக்கறிஞராக இருக்கும் கணவர் மீது அவரது மனைவி காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் ஆண் குழந்தை - பெண் குழந்தை என்ற பாகுபாடு சமுதாயத்தில் இருந்தது. இதன் காரணமாக பெண் குழந்தைகளை சுமையாக கருதிய பெற்றோர் கருக்கலைப்பு செய்து வந்தனர், பிறந்த பெண் குழந்தைகளை கொலை கூட செய்தனர். இந்த அவல நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கி தற்போது ஏற்றத் தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்திருக்கிறது. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும், மெத்தப் படித்தவர்களே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் கவலையளிப்பதாக உள்ளது.

Also Read: இந்தியாவை பாராட்டிய தலிபான்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் தாதர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. பெண்ணின் கணவருடைய குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள். அப்பெண்ணின் மாமியார் கூட ஒரு வழக்கறிஞர் தான். கணவருடைய சகோதரி மருத்துவராக உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அத்தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என அப்பெண்ணின் கணவர் கண்டிப்புடன் கூறி வந்திருக்கிறார். குடும்பத்தினையும், குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என கேட்ட கணவர், அந்த பெண் 2011-ல் மீண்டும் கர்ப்பம் அடைந்த போது கருவில் இருப்பது பெண் என அறிந்து மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார்.

Also Read:  ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் – முழு விவரம்!

இதன் பின்னர் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய வைத்த கணவர், அவரின் மனைவியை ஆண் குழந்தை பெற்றெடுக்கும் நோக்கில் மருத்துவ சிகிச்சை பெற வைத்திருக்கிறார். இதன் பின்னர் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு சில நவீன சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சைகளையும் செய்ய வைத்திருக்கிறார். இந்த சிகிச்சையின் போது கிட்டத்தட்ட 1500 ஸ்டீராய்ட் மற்றும் ஹார்மோன் ஊசிகள் அப்பெண்ணுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

இது போன்ற சிகிச்சை முறைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதால் அவர் மனைவியை பாங்காக்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆண் குழந்தைக்காக கணவர் செய்த கொடுமைகளை தாங்க முடியாத அவரது மனைவி இது தொடர்பாக தற்போது காவல்நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண் குழந்தைக்காக இந்த நவீன காலத்தில், நவீன முறையில் பெண்களை கொடுமைப்படுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: