இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் (India's drug regulator) இருந்து கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு, விரைவில் வழக்கமான சந்தை அனுமதி (regular market approval) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்கிற கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பூசிகளின் விலை ஆனது, ஒரு டோஸுக்கு ரூ.275 என்றும், மற்றும் குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கான கூடுதல் சேவைக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திற்கு (National Pharmaceutical Pricing Authority - NPPA) கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பூசிகளை மலிவான விலையின் கீழ் வழங்குவதற்கான விலையை நிர்ணயிக்கும் பணியைத் தொடங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.1,200 ஆகவும், தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.780 ஆகவும் உள்ளது. மேலே குறிப்பிட்ட 2 தடுப்பூசிகளின் விலையில் கூடுதலாக ரூ.150 என்கிற சேவைக் கட்டணமும் அடங்கும்.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி இந்தியா மற்றும் இதர உலக நாடுகளில் பெரிய எண்ணிக்கையிலான மனித உயிர்களை பலி வாங்கி, கனவில் கூட நினைத்து பார்க்காத வண்ணம் மருத்துவத் துறையில் நெருக்கடிகளை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்று நோயின் விளைவாக, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்கிற இரண்டு தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டின் கீழ் மட்டுமே இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டன.
Also Read : இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (Emergency Use Authorization - EUA) வழங்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கோவிட்-19 தொடர்பான நிபுணர் குழு, கோவிட்-19 தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயன்படுத்துவதற்கான வழக்கமான சந்தை அனுமதியை வழங்கும் படி பரிந்துரைத்தது.
"தடுப்பூசிகளின் விலையை நிர்ணயம் செய்யுமாறு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரு டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினின் விலை ரூ.275 ஆகவும், அதற்கான கூடுதல் சேவைக் கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப்படும்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Also Read : Budget 2022: முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்.. அல்வா கிண்டுவது நிறுத்தம்!
நினைவூட்டும் வண்ணம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் இயக்குனர் (அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள்) பிரகாஷ் குமார் சிங், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வழக்கமான சந்தை அனுமதி கோரி கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி அன்று இந்தியாவின் ட்ரக் ரெகுலேட்டர் ஜெனரலுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
Also Read : இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவரா நீங்கள்? - அப்படியானால் இந்த 7 நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரான வி கிருஷ்ணா மோகன், கோவாக்சின் தடுப்பூசிக்கான வழக்கமான சந்தை அங்கீகாரத்தை கோரும் போது, மருத்துவத்திற்கு முந்தைய தரவுகள் மற்றும் மருத்துவத் தரவுகளுடன் சேர்த்து வேதியியல், உற்பத்தி மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய முழுமையான தகவல்களையும் சமர்ப்பித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.