முகப்பு /செய்தி /இந்தியா / நிர்வாண படங்களை அனுப்பி பாலியல் சீண்டல் : 25 பெண் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறிய ஆன்லைன் டெலிவரி பாய் கைது!

நிர்வாண படங்களை அனுப்பி பாலியல் சீண்டல் : 25 பெண் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறிய ஆன்லைன் டெலிவரி பாய் கைது!

கைது செய்யப்பட்ட ஜோதிராம்

கைது செய்யப்பட்ட ஜோதிராம்

ஆபாச படம், வீடியோ கால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி பாய் மீது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மாலட் மாவட்டத்தில் 27 வயது நபர் ஜோதிராம் பாபுராவ் மன்சுலே. இவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தான் டெலிவரிக்கு செல்லும் வீடுகளில் பெண்கள் ஆர்டர் செய்திருந்தால், அவர்களின் செல்போன் நண்பர்களை தனியே சேகரித்து வைத்து தனது தனிப்பட்ட செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர், அவர்களுக்கு வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மாலாட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியும், வீடியோ கால் செய்து அந்தரங்க உறுப்பை காட்டியும் ஜோதிராம் தொல்லை செய்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறைக்கு புகார் அளிக்கவே, அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்ட ஜோதிராமை கைது செய்தனர். தொடர்ந்து அவரின் செல்போனில் ஆராய்ந்தபோது இவர், 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போரிவிலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

First published:

Tags: Crime News, Online crime