Home /News /national /

மைசூரில் கோலாகலமாகத் தொடங்கியது தசரா விழா!

மைசூரில் கோலாகலமாகத் தொடங்கியது தசரா விழா!

மைசூரு அரண்மனை

மைசூரு அரண்மனை

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கர்நாடக மாநிலம், மைசூருவில் பிரசித்திபெற்ற தசரா விழா இன்று தொடங்கியது. இதேபோல் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கர்நாடகாவின் மைசூரு நகரில் விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா மாநில அரசு சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தசரா விழாவை எளிமையாக நடத்துவதற்கு அரசு திட்டமிட்டது.

    இந்நிலையில், சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று தசரா விழா தொடங்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் மகேஷ், ஜெயமாலா, இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவரும், சமூக ஆர்வலருமான சுதா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சுதா மூர்த்தி, குடகு மாவட்ட சீரமைப்புப் பணிக்காக 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார்.

    இதனிடையே, மைசூரு அரண்மையில் சிறப்புப் பூஜையுடன் தசரா திருவிழா தொடங்கியது. அரச பரம்பரையைச் சேர்ந்த யகுவீர் கிருஷ்ணதுத்தா முன்னிலையில் இந்தப் பூஜைகள் நடைபெற்றன.

    இதேபோல் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், குலசேசகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Celebrations, Dussera, Mysuru, Mysuru Palace

    அடுத்த செய்தி