திருமணத்திற்கு முன் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்த முயன்ற மணமக்கள் பாிதாப பலி

திருமணத்திற்கு முன் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்த முயன்ற மணமக்கள் பாிதாப பலி

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மணமக்கள்

திருமணத்திற்கு முன்னர் காவிரி ஆற்றில் போட்டோ ஷூட் எடுக்க நினைத்த மணமக்கள், பரிசலில் ஒரு முனையில் நின்றபோது நிலைதடுமாறி சாய்ந்ததில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

  • Share this:
கர்நாடகத்தில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ ஷூட்டின் போது பரிசல் கவிழ்ந்த விபத்தில் மணமக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 28வயதான கட்டிட ஒப்பந்ததாரர் சந்துருவுக்கும், 20 வயதான சசிகலாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் 22ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்து உள்ள முதுகுதோரே என்ற இடத்தில் உள்ள மல்லிகார்ஜூன ஸ்வாமி கோயிலுக்கு வழிபட சென்றனர். அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது காவிரி ஆற்றில் இருந்தபடி புகைப்படங்களை எடுக்க விரும்பினர். மணமக்களும், புகைப்பட குழுவினரும் பரிசலில் தலக்காடு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

ALSO READ |  புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை முன் காதல்ஜோடி சாதி மறுப்பு திருமணம்

அப்போது பரிசலில் ஒரு முனையில் மணமக்கள் நின்றபோது நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் சசிகலா தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற சந்துருவும் தண்ணீரில் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

புகைப்படக்கலைஞர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களால் மணமக்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. பரிசல் ஓட்டி உயிர்தப்பி நீந்தி கரை சேர்ந்தார். இந்த சம்பவத்தில் உடல்களை மீட்டு, தலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: