• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம் - சோனியாவைக் குறிவைக்கும் அமலாக்கத்துறை

அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம் - சோனியாவைக் குறிவைக்கும் அமலாக்கத்துறை

கிறிஸ்டியன் மைக்கேல்

கிறிஸ்டியன் மைக்கேல்

இத்தாலிப் பெண்மணியின் மகன் என்ற வார்த்தையும் குறிப்பிட்டார். ஆனால், எந்த விஷயத்துக்காகக் குறிப்பிட்டார் என்பதை இப்போதைய கட்டத்தில் தெரிவிக்க முடியாது என்று அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, இடைத் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் சோனியா காந்தியின் பெயரைப் பயன்படுத்தினார் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் தொடர்புடைய கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

    இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட அவரை, சி.பி.ஐ 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை அவரை விசாரித்து வருகிறது. நேற்று, கிறிஸ்டியன் மைக்கேலை, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.

    சோனியா காந்தி


    அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விசாரணையின்போது சோனியா காந்தியின் பெயரைக் கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டார். மேலும் இத்தாலிப் பெண்மணியின் மகன் என்ற வார்த்தையும் குறிப்பிட்டார். ஆனால், எந்த விஷயத்துக்காகக் குறிப்பிட்டார் என்பதை இப்போதைய கட்டத்தில் தெரிவிக்க முடியாது. விசாரணையின் போது R என்றும் குறிப்பிட்டார்.

    மைக்கேலுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். சோனியா காந்தி தொடர்பான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று வழக்கறிஞரிடம் துண்டுச் சீட்டில் எழுதி கேள்வி கேட்கிறார்’ என்று தெரிவித்தனர்.

    அமலாக்கத்துறையின் வாதத்தையடுத்து, மைக்கேலுக்கு 7 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: