ஹோம் /நியூஸ் /இந்தியா /

சமூக வலைத்தளத்தில் பெண் போல பழகி ரூ.12 லட்சம் மோசடி - கோவை வாலிபரை கைது செய்த மும்பை போலீஸ்

சமூக வலைத்தளத்தில் பெண் போல பழகி ரூ.12 லட்சம் மோசடி - கோவை வாலிபரை கைது செய்த மும்பை போலீஸ்

மோசடி வலிபரை கைது செய்த மும்பை காவல்துறை அவரிடம் இருந்து 119 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மோசடி வலிபரை கைது செய்த மும்பை காவல்துறை அவரிடம் இருந்து 119 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மோசடி வலிபரை கைது செய்த மும்பை காவல்துறை அவரிடம் இருந்து 119 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பையில் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு பழக்கம் நாளடைவில் அதிகமாகி வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

  கோவை பெண்ணிடம் மும்பையைச் சேர்ந்த அந்த பெண் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டால் நல்ல வருவாய் ஈட்டலாம் என ஆசை காட்டியுள்ளார். இந்த லிங்க் மூலம் வார்த்தகம் செய்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறி லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

  இதை நம்பி மும்பை பெண்ணும் ரூ.12 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வருவாய் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அப்போது தான் தன்னிடம் பழகியது கோவையை சேர்ந்த பெண்ணல்ல ஒரு ஆண் என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ஜாக்சன் என்ற 38 வயது வாலிபரை தமிழ்நாடு போலீஸ் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

  இதையும் படிங்க: மாஜி அமைச்சர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார்.. கேரளா அரசியலில் பரபரப்பு

  அவரிடம் நடத்திய விசாரணையில் இது போன்ற பல மோசடிகளில் இவர் ஈடுபட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரை கைது செய்த மும்பை காவல்துறை அவரிடம் இருந்து 119 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 30 நடப்பு வங்கி கணக்குகள், கிரிப்டோ கரன்சி இருந்த 5 கணக்குகள் முடக்கப்பட்டன.மோசடி நபரை மும்பை அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Cyber fraud, Mumbai, Online crime