கோவிட் காலத்தில் முன்களப் பணியாளர்களின் தேவையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தனர். குறிப்பாக, மருத்துவத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோரின் தேவைகள் உலகம் முழுவதும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கேரளா மாநிலத்தில்தான் அதிகளவில் செவிலியர்கள் உள்ளனர். மற்ற மாநிலங்களில் கூட கேரளா மாநிலத்தின் செவிலியர்களின் சேவையும் தேவையும் தான் அதிகம் காணப்படுகிறது.குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 50 சதவீதம் செவிலியர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், நாட்டில் மூன்று கோவிட் அலை வந்து சென்ற நிலையில், இந்த காலகட்டத்தில் குஜராத்தில் மாநிலத்தில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். குறைவான ஊதியமே இதற்கு காரணமாகும். கேரளாவில் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.22,000ஆக உள்ளது. ஆனால், குஜராத்திலோ கோவிட் போன்ற தேவை உள்ள நெருக்கடி காலகட்டத்தில் கூட செவிலியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆயிரம் தொடங்கி ரூ.20,000க்குள் தான் உள்ளது. சொல்லப்போனால் இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை கூட வழங்கப்படுவதில்லை. இதுவே கேரள செவிலியர்களின் வெளியேற்றத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது.
அத்துடன் இந்த பெருந்தொற்று காலத்தில் வளைகுடா நாடுகளில் செவிலியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அங்கு நல்ல ஊதியம் கிடைப்பதால் இவர்கள் அங்கு பணிக்கு செல்கின்றனர். எனவே, செவிலியர்கள் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போதை ட்ரென்டில் செவிலியர்களின் தேவை அதிகம் காணப்படுவதால் ஆண்கள் பலர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விருப்பத்துடன் செவிலியர் பணிக்கு வருகின்றனர்.
இதையும் படிங்க:
இந்தியாவில் புதியவகை டைனோசர்கள் மூட்டைகள் கண்டுபிடிப்பு - ஆராய்ச்சியாளர்கள் வியப்பு
கோவிட் காலத்திற்குப் பின் சுகாதாரத்துறையில் பணியாளர்களின் தேவையானது 20 சதவீதம் அதிகரித்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய பணியாளர்களை விரைவில் உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. கோவிட் காலத்தில் படித்து வெளியேறிய மாணவர்களை பணிக்கு எடுப்பதில் பல நிர்வாகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் கல்வியில் பயின்று பாஸ் செய்தார்கள் என்பதே இதற்கு காரணம். எனவே, இந்த பிரச்னையும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.