தீபாவளி பண்டிகை காலத்தில் குறைந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்...

பொருளாதார மந்தம் காரணமாக தேவை தேக்கமடைந்துள்ளதாகவும், மற்ற பருவங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கட்டணத்தை விமான நிறுவனங்கள் குறைத்து இருப்பதாகவும் தனியார் விமான நிறுவன மூத்த நிர்வாகி கூறினார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் குறைந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்...
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 23, 2019, 11:48 AM IST
  • Share this:
பொருளாதார மந்தம் காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் பெருமளவில் குறைந்துள்ளன.

பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர் செல்வதை சாதகமாக்கி கொண்டு விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.

நடப்பாண்டு பொருளாதார மந்தம் காரணமாக வழக்கமாக விமானத்தில் செல்லும் மக்கள் இம்முறை விமான சேவையை தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.


இதனால் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் விமானக் கட்டணங்கள் 44 சதவீதம் வரை குறைந்துள்ளன. கடந்தாண்டு டெல்லியில் இருந்து சென்னைக்கு 15 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய 5,571 ரூபாயாக இருந்த கட்டணம் நடப்பாண்டு 3071 ரூபாயாக குறைந்தது.

இதே போல, சென்னை-டெல்லி விமானக் கட்டணம் 5,688 ரூபாயில் இருந்து 4,382 ரூபாயாக குறைந்தது. டெல்லி-புனே விமானக் கட்டணம் 5,219 ரூபாயில் இருந்து 3,631 ரூபாயாகவும், டெல்லி - ஹைதராபாத் விமானக் கட்டணம் 4,750 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மைனஸ் 4 சதவீதமாக இருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை ஜூன் மாதத்தில் 6% ஆக உயர்ந்து பின்னர் மீண்டும் செப்டம்பரில் 1.18% ஆக குறைந்தது.பொருளாதார மந்தம் காரணமாக தேவை தேக்கமடைந்துள்ளதாகவும், மற்ற பருவங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கட்டணத்தை விமான நிறுவனங்கள் குறைத்து இருப்பதாகவும் தனியார் விமான நிறுவன மூத்த நிர்வாகி கூறினார்.

அதே நேரத்தில், விமான கட்டணங்கள் குறைவுக்கு பொருளாதார மந்தநிலை காரணம் இல்லை என்றும் தொழில் போட்டியால் விமான நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து இருப்பதாகவும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Also see...

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading