Home /News /national /

மும்பையில் திடீர் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திருப்பிவிடப்பட்ட 2 விமானங்கள்!.

மும்பையில் திடீர் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திருப்பிவிடப்பட்ட 2 விமானங்கள்!.

ஒவ்வொரு விமானமும் புறப்படுவதற்கு முன் ஒரு விமான பராமரிப்பு பொறியாளரால் (AME) சரிபார்க்கப்பட்டுச் சான்றளிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு விமானமும் புறப்படுவதற்கு முன் ஒரு விமான பராமரிப்பு பொறியாளரால் (AME) சரிபார்க்கப்பட்டுச் சான்றளிக்கப்படவேண்டும்.

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் (Go First airline) நிறுவனத்தின் 2 விமானங்கள் அடுத்தடுத்து என்ஜின் கோளாறுகளை எதிர்கொண்டதால், தொடர்ந்து பறக்க முடியாமல் தரையிறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தகவல் தெரிவித்து உள்ளது.

    திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பையிலிருந்து 'லே' விற்கு செல்லவிருந்த கோ ஃபர்ஸ்ட் ஏர்லைனின்(Go First airline) ஒரு விமானம் டெல்லியிலும், ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்லவிருந்த மற்றொரு விமானம் ஸ்ரீநகருக்கும் திருப்பிவிடப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

    இதில் மும்பை - லே செல்லவிருந்த Go First aircraft VT-WGA ஃபிளைட் G8-386 என்ஜின் எண் 2-ன் EIU-ல் (இன்ஜின் இன்டர்ஃபேஸ் யூனிட்) ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது. அதே போல ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட மற்றொரு Go First A320 aircraft VT-WJG ஃபிளைட் G8-6202 என்ஜின் எண் 2-ல் EGT-யின் ஓவர் லிமிட் காரணமாக ஸ்ரீநகருக்கு விமானத்தைத் திருப்பி விட வேண்டியிருந்தது என DGCA அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 2 விமானங்களும் மீண்டும் அனுமதி கிடைத்த பிறகே இயங்கியது.

    ஒவ்வொரு விமானமும் புறப்படுவதற்கு முன் ஒரு விமான பராமரிப்பு பொறியாளரால் (AME) சரிபார்க்கப்பட்டுச் சான்றளிக்கப்படவேண்டும். இந்நிலையில் இதுவரை பல தொழில்நுட்ப கோளாறு பாதிப்புகள் பற்றி விமான நிறுவனங்கள் புகாரளித்த நிலையில், சமீபத்தில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் சோதனைகளை நடத்தியது. அப்போது பல நிறுவனங்களின் விமானங்கள் புறப்படுவதற்கு முன் சான்றளிக்கும் பொறியியல் பணியாளர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து AME பணியாளர்களை பணியமர்த்துவது குறித்த விமான நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை DGCA தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு வரும் ஜூலை 28-க்குள் இணங்க விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுறுத்தியுள்ளது. குறைபாட்டிற்கான காரணத்தை விமான நிறுவனங்களின் AME குழுக்கள் தவறாகக் கண்டறிந்து வருகின்றன என்பதையும் எங்கள் சோதனையில் தெரிய வந்துள்ளது என DGCA குறிப்பிட்டுள்ளது.

    MEL releases என்பது, பழுதுபார்க்கும் வரை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சில செயல்படாத உபகரணங்கள் அல்லது கருவிகளுடன் விமானம் பறக்க அனுமதிக்கப்படுவது ஆகும். விமானங்களை இப்படி MEL releases உடன் பறக்க அனுமதிக்கும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாகவும் DGCA-வின் சோதனையில் தெரிய வந்துள்ளது.

    தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்காத போக்குவரத்து நிலையங்களில் A Category சான்றளிக்கும் ஊழியர்களுக்கு விமான நிறுவனங்கள் அடிக்கடி one-off authorisation அளித்து வருவதும் தெரிகிறது.

    Category A இன்ஜினியர் 'லிமிடெட் ஸ்கோப் இன்ஜினியர்' என்று அழைக்கப்படுகிறார், மேலும் விமானம் எந்த சிக்கலான குறைபாடும் இல்லாதபோது மட்டுமே புறப்படுவதற்கான விமானங்களைச் சான்றளித்து வெளியிட அனுமதிக்கப்படுவார்.

    Category B1 இன்ஜினியர் இயந்திரக் குறைபாடுகளைக் கையாளும் திறன் கொண்டு, A Category இன்ஜினியரை விட ஒரு படி மேலே இருக்கிறார். அதே போல B2 Category இன்ஜினியர்கள் விமானங்களின் எலெக்ட்ரானிக் உபகரணங்களில் உள்ள குறைபாடுகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள்.

    இன்டிகோவின் ஷார்ஜா-ஹைதராபாத் விமானம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் காலிகட்-துபாய் விமானம், பஹ்ரைன்-கொச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எனக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல இந்திய விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. 18 நாட்களுக்குள் சுமார் 8 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் தற்போது ரெகுலேட்ரி ஸ்கேனரில் உள்ளது. DGCA தற்போது இந்த சம்பவங்கள் அனைத்தையும் விசாரித்து வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Flight

    அடுத்த செய்தி