Home /News /national /

மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை.. உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை.. உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனையில் மின்தடை

மருத்துவமனையில் மின்தடை

மருத்துவமனையில் அடிக்கடி பேட்டரிக்கள் தொலைந்து போவதால் அதை ஜெனரேட்டரில் இருந்து தனியாக நீக்கி வைத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் மின் தடை ஏற்பட்டதால் நோயாளிக்கு மொபைல் போன் டார்ச் மூலம் சிகிச்சை அளித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கு ஜெனரெட்டரை இயக்கி உடனடியாக மின் விநியோகத்தை வரவைக்காமல், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தின் மூலம் சிகிச்சை செய்த அவல நிலை ஏற்பட்டது. இதன் காணொலியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

    பெண் ஒருவர் ஸ்ரெச்சரில் உள்ள நிலையில், அவரை சுற்றி பலரும் செல்போன் மூலம் வெளிச்சம் பரப்பி மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். மற்ற நோயாளிகளும் இருட்டில் அமர்ந்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஆர்டி ராம் கூறுகையில், "மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாமல் இல்லை. ஆனால், ஜெனரேட்டரில் பேட்டரிகளை கொண்டு வர சுமார் 20 நிமிடம் தாமதம் ஆகியுள்ளது. இங்கு அடிக்கடி பேட்டரிக்கள் தொலைந்து போவதால் அதை நாங்கள் தனியாக நீக்கி வைத்துள்ளோம்" என்றார்.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370 சட்ட சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை... குலாம் நபி ஆசாத்

    ஆனால் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் தவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
    Published by:Kannan V
    First published:

    Tags: Govt hospital, Power cut, Uttar pradesh

    அடுத்த செய்தி