விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த தேர்தலை விட அதிகரித்த வாக்குப்பதிவு!

கேஎஃப்சி, ஸ்விக்கி மற்றும் சினிமா டிக்கெட் தளமான புக் மை ஷோ ஆகியவை புதிதாக வாக்களிப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்து நினைவூட்டின.

விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த தேர்தலை விட அதிகரித்த வாக்குப்பதிவு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 22, 2019, 4:59 PM IST
  • Share this:
2019-ன் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சற்று அதிகரித்துள்ளது.

 2019 மக்களவைத் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்து இந்திய குடிமகன்களை ஆர்வத்துடன் முடிவுகளை எதிர்பார்க்க வைத்துள்ளது. மக்களவை குடியரசு நோக்கில் சிறப்பாக வெற்றி பெற்ற ஒன்றாகும். குடியரசின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்” அரசு என்ற முக்கியமான அம்சம் வாக்காளர் பதிவின் அடிப்படையிலானது.

தற்போதைய தேர்தலில் 542 தொகுதிகள் முழுவதிலும் வாக்காளர் பதிவு மொத்தம் 67.11% ஆகும். வேலூர் தொகுதியில் தேர்தல் தடை செய்யப்பட்டு, திரும்பப் பெறப்படப்பட்டிருந்தாலும், கடந்த மக்களவைத் தேர்தலை விட வாக்களிப்பு 1.16% உயர்ந்துள்ளது.


இந்த எண்ணிக்கை மறு வாக்குப் பதிவிற்குப் பின்னர் மேலும் மாறுபடும். 2014-ம் வருடம் அனைத்து 543 மக்களவை தொகுதிகளின் வாக்காளர் பதிவின் இறுதி சதவிகிதம் 66.44% ஆகும். இது சமீபத்திய தேர்தலின் வாக்காளர் பதிவுடன் ஒப்பிடப்படும் போது மிகவும் குறைவாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும், வாக்களிப்புக் குறித்த விழிப்புணர்வை உயர்த்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

தேர்தல் ஆணையம் “வாக்களிப்பது ஏன் முக்கியம்?” என்பது குறித்தும் ஒருவர் குடிமகனாக அதில் ஏன் பங்கு பெற வேண்டும் என்பது குறித்தும் பல வாக்காளர் விழிப்புணர்வு திட்டங்களை துவக்கியது, தேர்தல் ஆணையம் மேலும் தேர்தல் குறித்து அறிவூட்ட மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த ட்விட்டருடன் கைகுலுக்கி “ஸிஸ்டமேடிக் வோட்டர்ஸ்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை உருவாக்கியது.ஸ்வீப் (ஏஸ்வீஈஈபி) பலவழிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமுடையது.

மேலும், தேர்தல் ஆணையம் வருடாந்திர குடியரசு திருவிழாவை உணர்ந்து கொள்ள #தேஷ்காமஹாத்யோஹார் என்பதை அறிமுகப்படுத்தியது. மற்றும், பிரபலங்கள் மூலம் தூண்டுதல், இயக்கங்கள், விளம்பரங்கள் போன்றவை மக்களை உற்சாகப்படுத்தி மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்த வழிகாட்டின.

பல பிராண்டுகளும் சமூக பொறுப்புணர்வு கொண்டு, வாக்களிப்பின் முக்க்கியத்துவத்தை வெளிச்சத்தில் கொண்டு வர பல இயக்கங்களை உருவாக்கின.

கேஎஃப்சி, ஸ்விக்கி மற்றும் சினிமா டிக்கெட் தளமான புக் மை ஷோ ஆகியவை புதிதாக வாக்களிப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்து நினைவூட்டின.

அனைத்து இயக்கங்களும் குடிமகன்களுக்கு அதாவது தங்கள் வாக்கினை அளிப்பது என்ற ஒரே செய்தியை வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டன. “ஏக் தின் கி சுட்டி” போன்ற இயக்கம் பலரால் பார்க்கப்பட்டு வாக்காளர் பதிவு சதவிகிதத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், பெரும்பாலான விழிப்புணர்வு இயக்கங்கள் சிறு ஆடியோ வடிவம், ஜிஐஎஃப்கள், மைக்ரோசைட்கள் போன்ற டிஜிடல் வடிவில் வெளிவந்தவை. டிஜிட்டல் முறை சிறந்த தளமும், திறம்பட்ட தகவல் தொடர்பு முறையும் ஆகும். குறிப்பாக, பல இயக்கங்கள், பார்வையாளர்களை சென்றடைய ஃபேஸ்புக் மற்றும் யூட்யூப் மூலம் நிரம்பி செயல்பட்டன.

பொறுப்புத் துறப்பு

 பட்டன் தபாவோ, தேஷ் பனாவோ ஆர்பி- சஞ்சீவ் கோயங்கா குழுமத்தினரால் வழங்கப்படும், இந்தியர்கள் அனைவரையும் சமீபத்தில் நடந்து முடிந்த (வாக்களிப்பு கட்டங்கள்) பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தூண்டிய நெட்வர்க்18 முயற்சியாகும். சமூக ஊடகத்தில் இந்தக் கலந்துரையாடலை ஹேஷ்டேக்#பட்டன்தபாவோதேஷ்பனாவோ என்பதை உபயோகித்து பின் தொடரவும்.

Also see...

First published: May 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading