Home /News /national /

நேரம் மற்றும் இடப்பற்றாகுறை காரணமாக குடியரசு தின விழாவில் 12 ஊர்திக்கு மட்டும் அனுமதி.. பாதுகாப்புத் துறை தகவல்

நேரம் மற்றும் இடப்பற்றாகுறை காரணமாக குடியரசு தின விழாவில் 12 ஊர்திக்கு மட்டும் அனுமதி.. பாதுகாப்புத் துறை தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2022ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்கு 29 பரிந்துரைகள் வரபெற்றன. இதில், தமிழகத்தின் ஊர்தியால் இறுதி பட்டியலுக்கு தேர்வாக முடியவில்லை.

    நேரம் மற்றும் இடப்பற்றாகுறை காரணமாகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    இந்தியக் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமான அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.

    இந்நிலையில், வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இது பெரும் அரசியல் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அந்த மாநிலங்கள் குற்றம் சாட்டின.

    மேலும் படிக்க: அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாஜக கொடி சேதம்: காரில் வந்தவர்களால் பரபரப்பு

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், குடியரசுத் தினவிழாவில் பங்கேற்கும் ஊர்திகளை தேர்வு செய்வதில் தலைசிறந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள்/ துறைகளிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளை கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பக்கலை, இசை, கட்டிடக்கலை, நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய நிபுணர் குழு பரிசீலனை செய்கிறது.

    கருபொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் காட்சி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊர்திகளை நிபுணர் குழு தேர்வு செய்கிறது. 2022ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்கு 29 பரிந்துரைகள் வரபெற்றன. இதில், தமிழகத்தின் ஊர்தி முதல் மூன்று சுற்று சந்திப்புகளில் இடம்பெற்றது. அதன் பின்னர், தமிழகத்தின் ஊர்தியால் இறுதி பட்டியலுக்கு தேர்வாக முடியவில்லை. கடந்த 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி பங்கேற்றது என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நம்பிப்போ மரின்மை கூறுகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை நிபுணர்கள் குழு தான் தேர்வு செய்கிறது. அதன்படி, இடப்பற்றாக்குறை மற்றும் நேரமின்மை காரணமாக இந்த முறை 12 மாநிலங்களின் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.

    Also read:   கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Delhi, Republic day

    அடுத்த செய்தி