நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனிகாலத்தின் தீவிரம் குறைந்தபாடு இல்லை. குறிப்பாக வட மாநிலங்களில் காலை வேளையில் பனிமூட்டம் தீவிரமாக இருப்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் இன்று அதிகாலையில் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 35க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மசூரி பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு ஏற்பட்ட பனிமூட்டத்தால் இந்த விபத்து நேரிட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இது தொடர்பாக காசியாபாத் மாவட்ட ஏசிபி பாடீல் நிமிஷ் கூறுகையில், "அதிகாலை வேளையில் பனிமூட்டம் தீவிரமாக இருந்ததால், நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வந்த வாகனங்கள் தெளிவாக தெரியவில்லை.
#WATCH | Several cars collided one after the other on the Delhi-Meerut Expressway, due to fog. Some people have been injured in the accident: DCP Rural Ghaziabad Ravi Kumar
(Video Source: Ghaziabad Police) pic.twitter.com/ZzID8may7S
— ANI (@ANI) February 19, 2023
இந்நிலையில், காலை 8 மணி அளவில் லாரி ஒன்று திடீரென நின்ற நிலையில், அதன் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கார், லாரி உள்ளிட்ட 35 வாகனங்கள் பெரும் சேதத்திற்கு ஆளாகின. இதனால் ஏற்பட்ட டிராபிக் ஜாமை சீரமைக்க சுமார் 2 மணிநேரம் ஏற்பட்டது" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Delhi, Expressway