மும்பை, புனே, நாசிக்கில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

கோவாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

news18
Updated: August 6, 2019, 11:25 AM IST
மும்பை, புனே, நாசிக்கில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!
கனமழையால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
news18
Updated: August 6, 2019, 11:25 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாசிக், தானே உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மும்பை, புனேவில் கனமழை கொட்டித் தீர்த்தது. நாசிக் மாவட்டத்தில் கங்காப்பூர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டதால், கரையோரத்தில் இருந்த கட்டிடங்களை தண்ணீர் சூழ்ந்தது. போலத்பூர் - மகாபலேஷ்வர் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.


புனேவின் சங்வி பகுதியில், வெள்ளத்தில் சிக்கிய 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூன்று கர்ப்பிணிகள் உள்பட அனைவரும் மீட்கப்பட்டனர்.

குஜராத்தில் அகமதாபாத், சூரத், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில், கனமழை பெய்தது. நவ்சாரி மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோவாவில் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading...

மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...