கேரளாவில் கனமழை நிலச்சரிவு காரணமாக ரயில் சேவை பாதிப்பு

கேரளாவில் கனமழை நிலச்சரிவு காரணமாக ரயில் சேவை பாதிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 18, 2018, 1:38 PM IST
  • Share this:
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களும், கேரளாவில் இருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் கேரள மாநிலம் தனித்தீவு போல காட்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து டேராடூனுக்கும், யஸ்வந்த்பூருக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பாலக்காடு முதல் கன்னியாகுமரி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா - சென்னை எக்ஸ்பிரஸ் ஆலப்புழா முதல் கோயம்புத்தூர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் - டெல்லி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.
First published: August 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading