ஊழியர்களின் போராட்டத்தால் ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு

தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சுமார் 400 தொழிலாளர்கள் நேற்றிரவு முதல் மும்பை விமான நிலையத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: November 8, 2018, 10:41 PM IST
ஊழியர்களின் போராட்டத்தால் ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு
விமான சேவை பாதிப்பு
Web Desk | news18
Updated: November 8, 2018, 10:41 PM IST
ஏர் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மும்பையில் அந்நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சுமார் 400 தொழிலாளர்கள் நேற்றிரவு முதல் மும்பை விமான நிலையத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விமான போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், மும்பை விமான நிலைய ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் சில விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும், இந்த நிலைமையை ஆராய்ந்து விரைவில் தாமதம் மற்றும் இடையூறை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Also watch

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்