மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் - முதல்வர் அதிரடி உத்தரவு

கோப்பு படம்

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் மகாராஷ்டிராவில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து வகையான பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அபாயம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 6, 971 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 35 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது.

  https://twitter.com/ANI/status/1363707035561259008

  இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் சாகன் புஜ்பால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இன்னும் 8 நாட்களுக்கு பிறகே மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்கள், சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

  அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  புனே நகரில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

   

  https://twitter.com/ANI/status/1363750231670624258

  நாக்பூர் மாவட்டத்திலும் மார்ச் 7ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காய்கறி சந்தைகள் வார இறுதி நாட்களில் மூடப்படும் எனவும், அமைச்சர் ராவத் கூறியுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: