ஹோம் /நியூஸ் /இந்தியா /

90% மாணவர்கள் சைவம்... அசைவ உணவுக்கு விடுதியில் தடை - சர்ச்சைக்குள்ளான டெல்லி கல்லூரி..!

90% மாணவர்கள் சைவம்... அசைவ உணவுக்கு விடுதியில் தடை - சர்ச்சைக்குள்ளான டெல்லி கல்லூரி..!

ஹன்ஸ்ராஜ் கல்லூரி

ஹன்ஸ்ராஜ் கல்லூரி

டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி விடுதியில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதியில் அளிக்கப்படும் உணவில் அசைவம் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். இந்த செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கொரோனா காலத்திற்கு முன்பு விடுதியில் மாணவர்களுக்கு அசைவம் கலந்த உணவு முறையே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு முடிவடைந்து கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டு விடுதி செயல்பட தொடங்கியதில் இருந்து அசைவ உணவு மறுக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை எனப் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகத்தில் இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி விடுதியில் படிக்கு வெளிநாட்டு மாணவர்கள் உணவு பிரச்சனை காரணமாக விடுதியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

இது குறித்து விளக்கம் அளித்த கல்லூரி முதல்வர் ரமா சர்மா, விடுதியில் உள்ள 90 சதவீதம் பேர் சைவம்தான் என்றும், அசைவ உணவுகளை விரும்புவோர், விடுதிக்கு வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளத் தடையில்லை என்றும் கூறியுள்ளார்.

First published:

Tags: College, Non Vegetarian