போராடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக தனது வீட்டையே விற்ற வழக்கறிஞர்...!

போராடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக தனது வீட்டையே விற்ற வழக்கறிஞர்...!
  • News18
  • Last Updated: February 10, 2020, 3:00 PM IST
  • Share this:
டெல்லி ஷாஹீன் பாக் பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி 57 நாட்களாக இடைவிடாமல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தன் சொந்த வீட்டை விற்று அவர்களுக்கு உணவளித்திருக்கிறார் டி.எஸ்.பிந்திரா எனும் வழக்கறிஞர்.

நாடு முழுக்க நடைபெறும் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டத்துக்கு மையப்புள்ளியாக ஷாஹீன் பாக் போராட்டம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் தொடங்கிய இப்போராட்டம் சிஏஏ எதிர்ப்புக்கு வெளியே வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு போன்ற நாட்டின் பிற பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்தது.

பரவலாக நாட்டின் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவளிப்பதற்காக தன் மூன்று Flat-களுள் ஒன்றை விற்றிருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.பிந்த்ரா. குருத்வாராவுக்கு, தான் சேர்த்து வைத்தப் பணத்தை இதற்குப் பயன்படுத்துமாறு தன்னுடைய பிள்ளைகள் ஆலோசனை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், முஸ்தஃபாபாத் மற்றும் குரேஜி ஆகிய இடங்களில் சுமார் ஐந்து நாட்களாக ’லங்கர்’ நடத்துவதாக அவர் கூறுகிறார். பொது மக்களுக்கு உணவளிக்கும் முறையை ’லங்கர்’ என சீக்கியர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இச்சேவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்