ஹோம் /நியூஸ் /இந்தியா /

மதுபோதை.. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி.. நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மதுபோதை.. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி.. நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரத்துடன் ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனது நேர்ந்த அவலம் குறித்து கடிதம் மூலம் புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் நவம்பர் மாதம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அந்த பயணி மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு AI 102 என்ற விமானம் வந்துள்ளது.

இந்த விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பு இருக்கையில் ஒரு நபர் குடிபோதையில் பயணம் செய்துள்ளார். மதிய உணவுக்குப் பின் விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் இருந்த அந்த ஆண் பயணி, தனது பேண்ட் ஜிப்பை அவிழ்த்து, 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்துடன், ஒரு சக பயணி அந்த அந்த நபரை அங்கிருந்து நகரும் படி அதட்டும் வரை அப்படியே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விமான உதவியாளர்களிடம் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரத்துடன் ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனது நேர்ந்த அவலம் குறித்து கடிதம் மூலம் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: 500 அடி உயரத்தில் குரங்குகளுடன் செல்ஃபி.. விபரீத ஆசையால் உயிரை பறிகொடுத்த ஆசிரியர்!

சுமார் 45 நாள் கடந்த நிலையில், அந்த நபர் அடுத்த 30 நாள்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய விளக்கம் கிடைத்த பின்னர் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் உறுதி அளித்துள்ளது.

First published:

Tags: Air India, Crime News, Urine, Woman shamed