`புற்று’ என்று நினைத்து குடிபோதையில் இருந்தவரின் வாய்க்குள் சென்ற பாம்பு- வீடியோ

news18
Updated: September 14, 2018, 5:09 PM IST
`புற்று’ என்று நினைத்து குடிபோதையில் இருந்தவரின் வாய்க்குள் சென்ற பாம்பு- வீடியோ
கோப்புப்படம்.
news18
Updated: September 14, 2018, 5:09 PM IST
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் விளையாட்டாக உயிருள்ள பாம்பை விழுங்கி உயிரிழந்துள்ளார்.

'விளையாட்டு வினையாகும்' என்ற பழமொழி உண்டு. அதை உண்மையாக்கும் விதமாக உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகிபால் சிங். கூலித் தொழிலாளியான இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சிறிய பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த மகிபால் விளையாட்டாக அந்த பாம்பை கையில் எடுத்து விளையாடினார்.

இதைக் கவனித்த அவரது நண்பர்கள் பாம்பிடம் விளையாடுமாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் அவரும் செய்து கொண்டே இருந்தார். மகிபாலின் நண்பர்கள் அதை செய் இதை செய் என தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருந்தனர். அவர் செய்வதை எல்லாம் ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டே இருந்தார்.

இறுதியாக ஒருவர் பாம்பை வாயில் போடு எனக்கூற சற்றும் யோசிக்காமல் மகிபால் பாம்பை வாய்க்கு அருகில் எடுத்துச் சென்றுள்ளார்.

வாய்க்கு அருகில் பாம்பை கொண்டுசென்றவுடன், அவர் சுதாரிப்பதற்குள் அவர் வாய்க்குள் பாம்பு சென்றுவிட்டது.
Loading...
முதலில் வாந்தி எடுத்த மகிபாலின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 4 மணி நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். குடித்து விட்டு விளையாட்டாக செய்த காரியத்தால் அவரது உயிர் போய்விட்டது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்