முகப்பு /செய்தி /இந்தியா / மீண்டும் விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழிப்பு... போதை மாணவரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி..!

மீண்டும் விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழிப்பு... போதை மாணவரின் செயலால் பயணிகள் அதிர்ச்சி..!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம்

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம்

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர் விமானத்தில் பயணித்த போது போதையில் தனது சக பயணி மீது சிறுநீர் கழித்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பறக்கும் விமானத்தில் சிலர் சக பயணிகள் மீது அத்துமீறலில் ஈடுபடும் நிகழ்வுகள் சமீப காலமாக அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதுபோன்ற எதிர்பாராத செயல்களால் விமான ஊழியர்களும், சக பயணிகளும் கடும் தொந்தரவிற்கு ஆளாகின்றனர். குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த  நபர் சக பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமாக மாறி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதையும் படிக்க; இந்த ஏரியில் நீங்கள் நீந்தாமல் மிதக்கலாம்... எங்க இருக்கு தெரியுமா?

இந்த சம்பவத்தை தொடர்ந்து சில மாதங்களிலேயே மற்றொரு இந்தியர் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று அமெரிக்காவின் ஜேஎஃப்கே விமான நிலையத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் AA292 வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் ஆர்யா வொஹ்ரா 21 வயதான இந்தியர் பயணம் செய்துள்ளார். டெல்லி டிபென்ஸ் காலனியை சேர்ந்தவரான இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஆவார்.

இவர் நேற்றைய விமான பயணத்தின் போது கடும் போதையில் இருந்ததாகவும், பயணத்தின் போது சக பயணிகளுக்கு கடும் தொந்தரவுகளை தந்ததாகவும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், இவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்த போது இருக்கையிலேயே சிறுநீர் கழித்து, அது சக பயணி மீதும் லீக் ஆனதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் புகார் அளித்தது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் அந்த மாணவர் தரையிறக்கப்பட்டார். அப்போதும் அவர் ஒத்துழைப்பு தராமல் அத்துமீறியதாக டெல்லி விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விமானத்திற்கு அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர் ஆர்யா தங்கள் விமானத்தில் பறக்க தடை விதித்து அமெரிக்க ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

First published:

Tags: Crime News, Delhi, Flight, Flight travel, Urine