Home /News /national /

சாலையில் உருண்டு விழுந்தும் லந்து... போதையில் போலீசின் காலரை பிடித்து உதைத்து ரகளை செய்த பெண் - வீடியோ வைரல்

சாலையில் உருண்டு விழுந்தும் லந்து... போதையில் போலீசின் காலரை பிடித்து உதைத்து ரகளை செய்த பெண் - வீடியோ வைரல்

போதையில் போலீசின் காலரை பிடித்து உதைத்து ரகளை செய்த பெண்

போதையில் போலீசின் காலரை பிடித்து உதைத்து ரகளை செய்த பெண்

Viral Video - ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை கண்டிக்கும் காவலரின் காவலரின் காலரை பிடித்து மிரட்டியும், உதைத்தும் பிரச்னை செய்துள்ளார்.

    பொது மக்களிடம் காவல்துறை சில முறை சட்டவிரோதமாக கடுமையான போக்கில் செயல்படுவது அவ்வப்போது அரங்கேறும் வேளையில், சில நேரங்களில் பொது மக்களும் காவல்துறையிடம் அத்துமீறி நடந்து கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பெண் ஒருவர் குடி போதையில் காவல்துறையினரை அவமதிக்கும் விதமாக காலரை பிடித்து மிரட்டிய சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரச்னை செய்யும் பெண் இரவு நேர பார்ட்டிக்குப் பின்னர் தனது இரு நண்பர்களுடன் ஓலா கேப்பில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது போதை தலைக்கேறிய நிலையில் அந்த பெண் கார் ஓட்டுனரை திட்டி அவமதித்து காரை ஓட்ட விடாமல் தொந்தரவு செய்துள்ளார். காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து இதை விசாரித்துள்ளனர்.


    காவல்துறை வந்த பின்னரும் அந்த பெண் பிரச்னை செய்வதை நிறுத்தவில்லை. காரை விட்டு இறங்கி சாலையில் சென்றவர்களையும், கார் ஓட்டுநரையும் திட்டி பிரச்னை செய்துள்ளார் அந்த பெண். அத்துடன் பொது வெளியில் தொந்தரவு செய்யும் விதமாக சாலையில் படுத்துக்கொண்டும் உருண்டு விழுந்தும் லந்து செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை கண்டிக்கும் காவலரின் காவலரின் காலரை பிடித்து மிரட்டியும், உதைத்தும் பிரச்னை செய்துள்ளார்.

    இதையும் படிங்க: Honeytrapஇல் சிக்கி பாகிஸ்தான் உளவாளிக்கு ஏவுகணை ரகசியத்தை கசியவிட்ட பொறியாளர் கைது

    பிரச்னையில் ஈடுபட்ட பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த மார்ச் 25ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளத்தில் இந்த காட்சிகள் தற்போது தான் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு ட்விட்டர் பயணாளர் இந்த சம்பவம் தொடர்பாக 11 காணொளிகளை பதிவிட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Drunkard, Viral Video

    அடுத்த செய்தி