• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் - அம்பலப்படுத்திய கடிதம்!

முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் - அம்பலப்படுத்திய கடிதம்!

Police

Police

முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
பஞ்சாப் முதல்வரின் மகனுடைய திருமணத்தில் பல்வேறு பாதுகாப்பு குளருபடிகள் இருந்ததாகவும், போலீசார் மதுபோதையில் இருந்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மாநில டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சமீபத்தில் தேர்வாகி பொறுப்பேற்றுக்கொண்டவர் சரன்ஜித் சிங் சன்னி. பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் நிறைவுக்கு வந்த போதிலும், தொடர்ந்து சர்ச்சைகள் அரங்கேறியவாறே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சர்ச்சை அரங்கேறியிருக்கிறது.

பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னியின் மகன் நவ்ஜித் சிங்கிற்கும், பொறியியல் பட்டதாரியான சிம்ரந்தீர் கவுர் என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிறன்று திருமணம் நடைபெற்றது. சிம்ரந்தீர் கவுர் டெராபசி அருகேயுள்ள அம்லலா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது எம்.பி.ஏ பயின்று வருகிறார். இவர்களின் திருமணம் மொகாலியில் உள்ள சச்சா தன் சாஹிப் எனும் குருத்வாராவில் நடைபெற்றது.

punjab


முதல்வரின் மகன் திருமணத்தை தொடர்ந்து கடந்த அக்டோபர் 8ம் தேதியன்று சங்கீத் எனும் நிகழ்ச்சி மொகாலியில் உள்ள அரிஸ்டா ரிசார்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் சிங் ரஞ்வா, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாப் திரைத்துறை மற்றும் இச்சைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: DC vs KKR | நீ அவுட் இல்லப்பா.. சோகமாக வெளியேறி சந்தோஷமா மீண்டும் களத்துக்கு வந்த ஹெட்மயர்!

முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின்படி, முக்கிய நுழைவாயில் பகுதி வழியாக ஆயுதம் வைத்திருந்த அதிகாரிகள் பலர் எந்தவித பாதுகாப்பும் நடைபெறாமல் உளே நுழைந்தனர் எனவும், அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் சீருடையில் இருந்தவாறு மது குடித்தனர், உணவு சாப்பிட்டனர். குறிப்பாக முதல்வர் சரன்ஜித் சிங் சன்னியின் பாதுகாப்பு கமாண்டோக்கள் மிகவும் பிசியாக தங்கள் மொபைல்களில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் மது குடித்தனர்.

மகளிர் போலீசார் காவல் சீருடையில் இல்லாமல் வேறு ஆடைகளை அணிந்து நிகழ்ச்சியினை ஆரவாரமாக கொண்டாட்டம் போட்டனர். சிலர் உணவுகளை சாப்பிட்டு, கூல்டிரிங்ஸ் குடித்தனர்.

Also Read:  கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் – உலக வங்கி தகவல்

விஐபிக்களின் நடமாட்டத்தை கண்டறிய அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அந்த இடத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற நிலையே இருந்தது. “ இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இந்த கடித விவகாரம் பஞ்சாப் போலீஸ் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த கடிதத்தின் எதிரொலியாக ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read:   அக்ஸர் பட்டேல் நீக்கம்.. சென்னை வீரர் சேர்ப்பு.. உலக கோப்பை இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்த பிசிசிஐ!

முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ஆகியோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: