Home /News /national /

விசாகப்பட்டினத்தில் கிரிப்டோ கரென்சி மூலம் போதைப்பொருள் வாங்கி விற்பனை- 3 பேர் கைது

விசாகப்பட்டினத்தில் கிரிப்டோ கரென்சி மூலம் போதைப்பொருள் வாங்கி விற்பனை- 3 பேர் கைது

போதை பொருட்களை கொள்முதல் செய்ய அவர்கள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தியுள்ளனர்

போதை பொருட்களை கொள்முதல் செய்ய அவர்கள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தியுள்ளனர்

போதைப் பொருட்களைக் கொள்முதல் செய்ய அவர்கள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    ஆந்திராவின் தொழில் நகரமான விசாகப்பட்டினத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த ஐந்து பேரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    விசாகப்பட்டினத்தில் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு வாகன சோதனை நடத்திய போலீசார் கார் ஒன்றை நிறுத்தி அதிலிருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

    Also Read : பழுது நீக்குவதற்கான சென்னை வந்துள்ள அமெரிக்க கப்பல்

    50 பாக்கெட் போதைப் பொருட்கள் மற்றும் 4 கிலோ 400 கிராம் எடையுடைய  போதை பவுடர்  என ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், 5 செல்போன்கள், கார் ஆகியவற்றைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக காரில் இருந்த ரவிக்குமார், வாசுதேவ கட்டையா, மோஜோஸ், யாதகிருஷ்ணா, முராரி சந்திப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரவிக்குமார் விசாகப்பட்டினத்திலிருந்து கோவாவுக்குக் கஞ்சாவைக் கொண்டு சென்று அங்குள்ள திலீப் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.

    Also Read :மணிப்பூரில் பதற்றமான சூழல்.. 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கி உத்தரவு

    மேலும் திலீப்பிடமிருந்து போதைப் பொருட்களை எடுத்து வந்து நண்பர்கள் உதவியுடன் விசாகப்பட்டினத்தில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. போதைப் பொருட்களைக் கொள்முதல் செய்ய அவர்கள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஐந்து பேரும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் குரூப்களை நிர்வகித்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது

    செய்தியாளர்: புஷ்பராஜ்- திருப்பதி
    Published by:Janvi
    First published:

    Tags: Cryptocurrency, Drug addiction

    அடுத்த செய்தி