சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும், விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான, தமிழிசை சௌந்தராஜன் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. அன்னையின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற இங்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக ஆரோவில் வாசியின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரிவாக்க பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆரோவில்வாசிகளுடன் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு மற்றும் அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரோவிலில் உள்ள பாரத் நிவாஸ் கருத்தரங்க கூடத்தில் இந்த அமைதி கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நிர்வாகக் குழு செயலர் ஜெயந்தி ரவி, ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அப்போது, அன்னையின் கனவு நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே நமது ஒற்றை நோக்கம் என்றும் இதற்காக பசுமை மாறாமல் ஆரோவில்லை புதுப்பிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதற்கு முன்னதாக ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும் துணைநிலை ஆளுநரும் ஆன சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: கடை முன் செல்போன் பேசிய பெண்ணை அடித்து உதைத்த பியூட்டி பார்லர் உரிமையாளர்
அப்போது அவர், ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகும், இங்கே சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தங்க வேண்டிய ஆரோவில் சர்வதேச நகரத்தில் 3 ஆயிரத்து 300 பேர் மட்டுமே தங்கி இருக்கின்றனர். இங்கே சாதி, மதம், மொழி, நாடு என்ற எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறார்கள். அன்னையின் கனவு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கு இயற்கை அழிப்பு இல்லாமலும் குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவு செய்யாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அரோவில்லில் சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அது களையப்பட வேண்டும் என்றும் பேசினார். போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஆரோவில் வாசிகளுக்கு தனிப்பட்ட வாழ்வுரிமை அளிக்கப்படுகிறது சட்டரீதியாக அரசாங்க ரீதியில் விதிமீறல் இல்லாமல் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஆரோவில்லில் விசா, பாஸ்போர்ட் ஆகியவை இல்லாமல் முறைகேடாக தங்கி இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, தற்போது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். வொர்கிங் கமிட்டி உறுப்பினர்கள் சில வரைமுறைகளோடு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் 90 சதவீத ஆரோவில் வாசிகள் அன்னை கனவு திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் ஒரு சிலர் இங்கு தங்கிக்கொண்டு தடுப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.