ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின்: அதிரடி சோதனையில் சிக்கியது - 6 பேர் கைது

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின்: அதிரடி சோதனையில் சிக்கியது - 6 பேர் கைது

கேரளாவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கேரளாவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கொச்சி கடற்கடையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kochi [Cochin], India

  கேரளா மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 200 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1,200 கோடியாகும். ஈரான் நாட்டில் இருந்து ஆறு கண்டெய்னர்கள் கொண்ட படகில் இந்த போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில், படகில் இருந்த கடத்தல்காரர்கள் ஆறு பேரையும் கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  முதல் கட்ட விசாரணையில் இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு முதலில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய கண்டெய்னர்கள் மூலம் இவை கொச்சி கொண்டு வரப்பட்டுள்ளன.

  இந்த நடவடிக்கை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சஞ்சய் சிங் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியான அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் கடற் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆய்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆப்கான், பாகிஸ்தான் எல்லை பகுதிகளை ஒட்டி ரோந்து பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த ஈரான் படகில் இருந்தவர்கள், ஹெராயினை கடலில் முழ்க வைத்து அவர்களும் கடலில் குதித்து தப்பிக்கப் பார்த்தார்கள். ஆனால், கடற்படையின் துரித நடவடிக்கையால் அவர்கள் பிடிக்கப்பட்டு, ஹெராயின் கைப்பற்றப்பட்டது என்றார்.

  இதையும் படிங்க: டிவி வெடித்து 16 சிறுவன் பலி.. உண்மையில் டிவி வெடிக்குமா... காரணம் என்ன?

  இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல், புழக்கமானது பறிமுதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குஜராத் கடற்கரைப் பகுதியே கடத்தல்காரர்களின் விருப்பமான பாதையாக மாறியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை குஜராத், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், ரூ.6,800 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர். மும்பையில் நேற்று போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 60 கிலோ போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Heroine, Kochi