ஓடும் கார் மீதேறி இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்ட நிலையில் இதுதெடர்பாக டிராபிக் போலீசார் கடும் அபராதத்தை விதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காஜியாபாத்தின் சில பகுதிகள் டெல்லி - மீரட் எக்ஸ்ப்ரஸ் சாலையில் அமைந்துள்ளன. இங்கு ஓடும் காரின் மிதேறி இளைஞர்கள் 2 பேர் குத்தாட்டம் போட்டனர். இவர்களில் காரை ஓட்டி வந்த இளைஞரும் அடங்குவார்.
உள்ளே சில இளைஞர்களும் உற்சாகத்தில் ஆடிக் கொண்டிருந்தனர். இந்த காட்சியை இன்னும் சிலர் வீடியோ எடுத்தனர். மதுபோதை காரணமாக இளைஞர்கள் விதி மீறலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க - ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுங்கள்.! கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய திமுக எம்.பி டிஆர் பாலு
இந்த காட்சியை சாலையில் சென்றவர்கள் ரிக்கார்டு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதில் காரின் நம்பர் ப்ளேட் தெளிவாக தெரிந்தது.
இதையும் படிங்க - திடீரென தீப்பற்றிய சுற்றுலா சென்ற பேருந்து: சுதாரித்து தப்பிய 37 மாணவர்கள்- உடமைகள் எரிந்து நாசம்
வீடியோ வைரலானதை தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காஜியாபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக கார் உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.