Home /News /national /

வரியில்லா மாத ஊதியம் ரூ.5 லட்சம் உள்பட இந்திய குடியரசுத்தலைவருக்கு கிடைக்கும் சலுகைகள்!

வரியில்லா மாத ஊதியம் ரூ.5 லட்சம் உள்பட இந்திய குடியரசுத்தலைவருக்கு கிடைக்கும் சலுகைகள்!

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

Droupadi Murmu : நாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கும் திரௌபதி முர்முவுக்கு மாதந்தோறும் எவ்வளவு ஊதியம் வழங்கப்படும்? குடியரசுத்தலைவர் என்ற முறையில் வேறு என்ன சலுகைகள் அவருக்கு கிடைக்கும்? என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு, நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவை அவர் தோற்கடித்துள்ளார்.

    இந்தியாவின் 14ஆவது குடியரசுத்தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிதாக வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பழங்குடி இனத்தில் இருந்து முதலாவது குடியரசுத்தலைவர், 2ஆவது பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.

    குடியரசுத்தலைவராக திரௌபதி முர்முவுக்கு கிடைக்க இருக்கும் பலன்கள் :

    நாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கும் திரௌபதி முர்முவுக்கு மாதந்தோறும் எவ்வளவு ஊதியம் வழங்கப்படும்?

    குடியரசுத்தலைவர் என்ற முறையில் வேறு என்ன சலுகைகள் அவருக்கு கிடைக்கும்? என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

    குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்றபோது எடுத்த படம் (Credit @narendramodi Twitter )


    குடியரசுத்தலைவரின் மாத ஊதியம் ரூ.1.5 லட்சம் என்று இதற்கு முன்பு இருந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இந்த ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மருத்துவ நலன், வீட்டு வசதி உள்பட அனைத்து சலுகைகளும் குடியரசுத்தலைவருக்கு கிடைக்கும். இது தவிர குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு மாத ஓய்வூதியமாக ரூ.1.5 லட்சம் கிடைக்கும்.

    Also Read : 'ஷீரடி சாய்பாபாவிற்கு வைரம் பதித்த தங்க கிரீடம்' 80 வயதில் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர் !

    முதல் குடிமகனுக்கு கிடைக்கும் சலுகைகள்

    1. ரூ.5 லட்சம் மாத ஊதியம் (வரி விலக்கு உடன்)
    2. மருத்துவ சிகிச்சை, பரிசோதனை உள்பட அனைத்து வசதிகள்
    3. ரைசினா மலையில் தங்குமிடம் இலவசம்
    4. குடியரசுத்தலைவருக்கான சிறப்பு கார் (பிரத்யேக வசதியுடன் கூடிய மெர்சிடஸ் பென்ஸ் கார்)
    5. குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு
    6. ஓய்வுக்குப் பிறகு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.1.5 லட்சம் கிடைக்கும்
    7. தனிப் பாதுகாவலர் உள்பட பலத்த பாதுகாப்பு வசதிகள்
    8. உதவியாளருடன் விமானப் பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள் இலவசம்

    எத்தனை வாக்குகள் பெற்றார்?

    முன்னதாக, குடியரசுத்தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நாடு முழுவதிலும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்றபோது எடுத்த படம் (Credit @narendramodi Twitter )


    தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.

    இவர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிலையில், அரசியலில் நுழைந்த பிறகு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு எம்எல்ஏ-வாகவும், பிஜூ ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசில் மாநில அமைச்சராகவும், பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்தவர். தற்போது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: President Droupadi Murmu

    அடுத்த செய்தி