தண்ணீர் தட்டுப்பாடு என்பது ஊடகங்கள் உருவாக்கும் செய்தி! மத்திய அமைச்சர் பேச்சு

வடக்கு உத்தரப் பிரதேசம், இமாலச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணைகளில் போதுமான நீர் உள்ளது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 9:28 PM IST
தண்ணீர் தட்டுப்பாடு என்பது ஊடகங்கள் உருவாக்கும் செய்தி! மத்திய அமைச்சர் பேச்சு
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: June 11, 2019, 9:28 PM IST
மத்திய அரசு ஆறு மாநிலங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு என்று வரும் செய்திகள் ஊடகங்கள் உருவாக்குபவை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. கடந்த மாதம், மத்திய அரசு மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுத்தது. தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று அறிவுரைவிடுத்திருந்தது. தமிழகத்திலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.

இந்தநிலையில், இன்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர ஷேகாவத், ‘வடக்கு உத்தரப் பிரதேசம், இமாலச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணைகளில் போதுமான நீர் உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ள அச்சம் ஊடகங்களால் உருவாக்கப்படுபவை’ என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதுமுள்ள மொத்த நீர் இருப்பு 35.99 பில்லியன் கியூபிக் மீட்டர் என்று குறிப்பிட்டுள்ளது. இதுமொத்த, நீர் தேக்கும் கொள்ளவில் 22% மட்டுமே ஆகும். மொத்த கொள்ளவு 161.993 பில்லியன் கியூபிக் மீட்டர் ஆகும்.

Also see:

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...