புல்வாமாவில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்; கார் வெடிக்க வைக்கப்படும் டிரோன் காட்சிகள்

Pulwama | வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யததில் காரை நகற்றினால் வெடித்து விடும் என்பதால் கார் அப்படியே வெடிக்க செய்யப்பட்டது.

புல்வாமாவில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்; கார் வெடிக்க வைக்கப்படும் டிரோன் காட்சிகள்
வீடியோ காட்சிகள்
  • Share this:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 20 கிலோ வெடிப்பொருட்களுடன் வந்த காரை பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையின் தகவலை அடுத்து அங்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வாகன சோதனையின் 20 கிலோ வெடிமருந்துகள் நிரப்பிய கார் ஒன்று பிடிக்கப்பட்டது. அப்போது கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் விரட்டி சென்று காரை பிடித்தனார். ஆனால் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.


காரின் பின் இருக்கையில் 20 கிலோ வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரை நகர்த்தினால் வெடித்து விடும் என்பதால் கார் அப்படியே வெடிக்க செய்யப்பட்டது. இதன் டிரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அதுபோன்ற பயங்கரவாத சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading