தேங்காய் பறிக்க 'டிரோன்' - ICAR கோவா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

தேங்காய் பறிக்க 'டிரோன்'

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும், கோவா பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்துள்ள பிளையிங் கோகோபாட் டிரோன், பனைமரம், பாக்கு மரம், டேட்ஸ் மரம் மற்றும் கரு மிளகு உள்ளிட்டவைகளை அறுவடை செய்யவும் பயன்படுத்த முடியும்.

  • Share this:
தேங்காய், நுங்கு, பாக்கு ஆகியவற்றை பறிப்பதற்கு, கோவா பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைந்து புதிய டிரோன் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

நூற்றாண்டுகளாக தேங்காய் மற்றும் நுங்கு குழைகளை பறிப்பதற்கு மனிதர்கள் பாடாய்பட வேண்டியிருக்கிறது. ஒருவர் மரத்தில் ஏறி அதனை பறித்தால் மட்டுமே, தேங்காய், நுங்கு கிடைக்கும் என்ற நிலையில் இருக்கக்கூடியதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

மரத்தில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்தவர்களும், கை, கால்கள் இழந்தவர்களும் அதிகமானோர் இருக்கின்றனர். விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு சில தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும், அவை பயன்படுத்துவதற்கு கடினமாக இருப்பதாக கூறுகின்றனர்.

ALSO READ | ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

மரத்தில் ஏறுவதற்கென்றே ஏணிபோன்ற இயந்திரம், மெஷினே மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு அடுத்த வெர்சனாக டிரோன்கள் மூலம் தேங்காய் மற்றும் நுங்கு பறிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும், கோவா பல்கலைக்கழகமும் இணைந்து இந்த கருவியை வடிவமைத்துள்ளனர்.

‘Fly-Cocobot’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த டிரோன், மிகவும் எளிமையாக கையாளக்கூடிய வகையிலும், தேங்காய் பறிப்பதற்கு மட்டுமின்றி பல்வேறு பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் குஷாக் எஸ்யூவி கார்கள் விரைவில் அறிமுகம்!

இந்த இயந்திரம் குறித்து பேசிய கோவா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திர காட் (Rajendra Gad), இந்த இயந்திரம் மூலம் பாதுகாப்பான தொலைவில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை பறிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறி விவசாயிகள் உயிரிழக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், ஒரு மணி நேரத்தில் 12 முதல் 15 மரங்களில் இருக்கும் தேங்காய்களை பறிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் இயந்திரங்கள் தேங்காய் பறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாகவும், மற்ற பயன்பாட்டுகளுக்கு அவற்றை உபயோகப்படுத்த முடியாது என ராஜேந்திர காட் கூறியுள்ளார். ஆனால், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும், கோவா பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்துள்ள பிளையிங் கோகோபாட் டிரோன், பனைமரம், பாக்கு மரம், டேட்ஸ் மரம் மற்றும் கரு மிளகு உள்ளிட்டவைகளை அறுவடை செய்யவும் பயன்படுத்த முடியும் என விளக்கம் கொடுத்துள்ளார்.

ALSO READ |  நார்வே பனிப்பாறையில் 500 ஆண்டுகள் பழமையான மெழுகுவர்த்தி பெட்டி கண்டுபிடிப்பு!

இந்த டிரோனில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் உரம் தெளிக்கவும், கத்தரி உள்ளிட்ட செடிகளின் கிளைகளை நறுக்கி திருத்தம் செய்யவும் பயன்படுத்த முடியும். ICAR-CCRI மற்றும் கோவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள இந்த டிரோனுக்கு விரைவில் காப்புரிமைகோரி விண்ணபிக்க உள்ளதாகவும் பேராசிரியர் ராஜேந்திரகாட் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய தொழில்நுட்ப கருவிகள் கண்காட்சி Kritagya Agtech Hackathon -ல் பிளையிங் கோகோபாட் முதல் பரிசை வென்றது.
Published by:Sankaravadivoo G
First published: